தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை அனைவரும் காரில் தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்றபோது திடீரென காரின் பின்புற டயர் வெடித்துள்ளது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பலத்தின் தடுப்பு சுவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ராஜ்குமார் உள்ளிட்ட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த ராஜ்குமாரின் நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்த குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.