திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு – விரைவில் கைது?

253

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை எழுந்துள்ளது.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசை திருமுருகன் காந்தி  தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே, அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. சில முறை சிறைக்கு சென்றும் அவர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். எனவே, அவர் மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  9 இடங்களில் முன்னிலை - தமிழகத்தில் தொடரும் அதிமுக ஆட்சி