Tamil Flash News
தமிழகத்தில் தாமரை குளம் குட்டையில் மட்டுமே மலரும் – போட்டுத்தாக்கும் திருமா
தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தை திருமாவளவன் சிதம்பரம் தனித்தொகுதியில் போட்டியிட்டு 4,90,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ தமிழகத்தில் மதவாத கட்சிகளுக்கு இடம் இல்லை என மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஆனால், தேசிய அளவில் எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்து விட்டது.
இந்துக்களின் எதிரியாக ராகுலை சித்தரித்துவிட்டார்கள். பிற மாநிலங்களில் எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் வாக்குகள் சிதறிவிட்டன. ஆனால், தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது. வேண்டுமானால் தமிழகத்தில் தாமரை குளம் குட்டைகளில் மலரும்’ என அவர் தெரிவித்தார்.