அடிக்கடி சர்ச்சையான பேச்சுக்களை பேசி வருவது விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் திருமாவளவனின் வாடிக்கையான செயலாக உள்ளது. கோவில் சிலைகளை பொம்மைகள் என மிக மோசமாக பேசி சில மாதங்கள் முன் அந்த விசயம் சர்ச்சையானது.
இப்போது மீண்டும் சனாதன தர்மம் என குறிப்பிட்டு பெண்களை கேவலமாக விபச்சாரிகள் என்ற வகையில் பேசியுள்ளார்.
இது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு நடிகை குஷ்புவும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கட்சி தாவுவது கேவலமான செயல் என கூறும் திருமாவளவன் பெண்களை கேவலமாக பேசலாமா என கூறியுள்ளார்.
இதற்கிடையே திருமாவளவன் பேச்சை குறிப்பிட்டு பாஜக கட்சியினர் #பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா என ட்ரெண்டாக்கி வருகின்றனர்.