வெடி வைத்து தகர்ப்போம் திருமாவளவனின் அடுத்த சர்ச்சை ஹெச்.ராஜா கண்டிப்பு

வெடி வைத்து தகர்ப்போம் திருமாவளவனின் அடுத்த சர்ச்சை ஹெச்.ராஜா கண்டிப்பு

சமீபத்தில் மனுஸ்ம்ருதியில் பெண்கள் விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் பெரியார் என்ற தொலைக்காட்சியில் கூறினார்.தொடர்ந்து ஹிந்து மத நூல்களில் உள்ளவற்றை திரித்து கூறுவதும் இல்லை என்றால் நடைமுறையில் இல்லாத நூலை வைத்து கொண்டு அதற்கு விளக்கங்கள் கூறுவதும் அதற்கு என்னதான் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டாலும் தான் கொண்ட கொள்கையில் கொஞ்சம் கூட பின்வாங்காமல் தான் சொன்ன சொல்லை மாற்றாமல் மன்னிப்பு கேட்காமல் கடைசி வரை இருப்பது திருமாவளவனின் கொள்கை.

ஏற்கனவே திருமா பெண்கள் பற்றி பேசியது ஒரு பக்கம் சர்ச்சையாகி வெடித்து கொண்டிருக்க தற்போது ராமர் பாலத்தை வெடிவைத்து தகர்ப்போம் என திருமா பேசியதின் உரைவீச்சு என்ற புத்தகம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜாவும் இதை கண்டித்துள்ளார்.