பெண்களை விபச்சாரிகள் என்ற வகையில் திருமாவளவன் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பலை நிலவுகிறது. மனுதர்மத்தில் பெண்கள் என்ற அடிப்படையில் மிகவும் மோசமாக திருமாவளவன் சமீபத்தில் பெரியார் என்ற யூ டியூப் சேனலில் பேசியுள்ளார்.
இதற்காக பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் அவர்கள் மத்திய குற்றப்பிரிவில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.
அண்ணன் திருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் நடத்துவது தவறு பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு ஏற்ப மனிதர்களை மனிதர்களாய் பாராது வருணபேதத்தின் மூலம் பிரித்தாண்டு ஒடுக்கி தாழ்த்தி வீழ்த்த துடிக்கும் மத அடிப்படைவாதிகளின் போக்கு கண்டிக்கதக்கது என சீமான் கூறியுள்ளார்.
— KS / Karthigaichelvan S (@karthickselvaa) October 23, 2020