திருமலை சிறப்பு தரிசனத்துக்கு கொரோனா சான்றிதல் தேவையில்லை

31

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. திருப்பதியில் இதனால் பக்தர்களுக்கு கட்டுப்பாடாக கொரோனா சான்றிதல் கட்டாயம் தேவை அப்படி கொரோனா சான்றிதலோடு வந்தால்தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவு 300 ரூபாய் டிக்கெட் எடுத்து ஸ்பெஷல் தர்சனில் செல்லும் பக்தர்களுக்கு கிடையாதாம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் இது குறித்து கூறியபோது தினமும் சென்னை வாலாஜா சாலையில் அதிகாலையில் கிளம்பும் சுற்றுலா வளர்ச்சி கழக பஸ்ஸில் திருப்பதி தரிசனக்கட்டணம் 300 ரூபாய் போக்குவரத்து மற்றும் சாப்பாடு செலவுடன் சேர்த்து 1850 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் இந்த சலுகையில் செல்லும்போது காலையில் திருத்தணி தமிழ்நாடு ஹோட்டலில் உணவும்  இரவு உணவுகளும் வழங்கப்படுமாம். திருப்பதியிலும் ஸ்வாமி தரிசனம் செய்யவைத்து அழைத்துவரப்படுவார்களாம். இதை செய்து வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் இதை அறிவித்துள்ளது.

பாருங்க:  நேற்றுடன் 19வது ஆண்டை நிறைவு செய்யும் ஆளவந்தான்
Previous articleகாதலன் படப்பாடலை வேறு வடிவில் பாடி வெளியிட்டிருக்கும் ரம்யா
Next articleதேர்தலில் வென்றால் கோவில்பட்டியில் இருக்க மாட்டேன் – தினகரன்