Tamil Flash News
திமுகவை நம்பி பலனில்லை – தினகரனுடன் கூட்டணி அமைக்கும் திருமா?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதல் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு கூட்டணியாகும் தேர்தலை சந்திக்கும் எனத் தெரிகிறது.
இதில், திமுகவுடன் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பதே தெரியவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலை சிறுத்தை வேண்டாம் என ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது.
எனவே, டிடிவி தினகரனோடு கூட்டணி அமைக்க தொல்.திருமாவளவன் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. மேலும், கடைசி நேரத்தில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டு திமுக கூட்டணியிலிருந்து ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் காங்கிரஸ், டிடிவி தினகரன், விடுதலை சிறுத்தை, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.