Connect with us

திருப்பத்தை தரும் திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா

Entertainment

திருப்பத்தை தரும் திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா

மாசி மாதம் மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. 12 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாமகம் விசேஷம் .இது கும்பகோணத்தில் மகாமக குளத்தில் விசேஷமாக நடைபெறும்.இருப்பினும் இது 12 வருடங்களுக்கு ஒருமுறை என்பதால் 12 வருடங்கள் மக்கள் இந்த விழாவுக்கு காத்திருக்க வேண்டும்.

ஆனால் மாசி மகம் திருவிழா வருடா வருடம் ஒரே ஒரு ஊரில் மட்டும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அது சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊராகும். இந்த ஊரில் செளமிய நாராயண பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். ராமானுஜர் வாழ்ந்த ஊர் இது.  அனைத்து மக்களும் ஒன்று அனைவருக்கும் ஸ்ரீநாராயணன் மந்திரம் உபதேசிக்க வேண்டும் என ராமானுஜர் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து இக்கோவிலின் உச்சியில் நின்றுதான் ராமானுஜர் மந்திரம் வழங்கினார்.

இந்த ஊரில் செளமிய நாராயணருக்கு மாசி மாதம் மகம் நட்சத்திர நாள்தான் உற்சவ நாள். இந்த நாளில் இங்கு தெப்பத்திருவிழா என்ற ஒன்று நடைபெறும்.

நாம் நினைத்ததை நிறைவேற செளமிய நாராயண பெருமாளை வேண்டி தெப்பக்குளத்தில் விளக்கு விடுவார்கள் . வேண்டுதல் நிறைவேறினால் இந்த விளக்கை செலுத்துகிறேன் என அங்கிருக்கும் விளக்கை எடுத்து வந்து மறு வருடம் அந்த விளக்கை அங்கு செலுத்துவார்கள்.

புகழ்பெற்ற இந்த விழாவை காண தென்மாவட்டங்கள் முழுவதும் இருந்து அதிகமான கூட்டம் வரும்.

நாளை இந்த விழா இங்கு விமரிசையாக நடக்க இருக்கிறது.

மதுரையில் இருந்து காரைக்குடி, தேவகோட்டை செல்லும் பேருந்துகளில் ஏறி திருப்பத்தூர் ஸ்டாப் இறங்கி அங்கிருந்து திருக்கோஷ்டியூர் செல்ல பஸ் மாற வேண்டும்.

பாருங்க:  தப்பியோடிய கொரோனா நோயாளி! அதிகாரிகளிடம் மிரட்டல்!
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top