நாளை திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா

36

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடினாலும் மாசி மகம் அன்று நீராடலாம். அன்று நீராடினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கும்பகோணத்தில் மகாமக குளத்திலும் நாளை விழா நடைபெறும் என்றாலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மாமாங்கம் எனப்படும் மகாமகமே பெரிய விழாவாக கருதப்படுகிறது.

இதுபோல சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள செளமிய நாராயண பெருமாள் கோவிலில் நடக்கும் தெப்பத்திருவிழா தென்மாவட்டங்களில் பிரபலம்

தெப்பத்தில் விளக்கேற்றி வழிபட்டு விட்டு அங்கு இருக்கும் விளக்குகளில் இரண்டை எடுத்து வந்துவிட வேண்டும் விளக்கேற்றும்போது மனதில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என ஆழ்ந்த மனதுடன் செளமிய நாராயண பெருமாளை நினைத்து பிரார்த்தித்து கொள்ளவேண்டும்.

சரியாக ஒரு வருட காலத்திற்குள் நாம் மனதில் நினைத்த, வேலையின்மையோ, திருமணத்தடையோ, குழந்தையின்மையோ இந்த பிரச்சினைகள் சரியாகி விடும் என்பது நம்பிக்கை அப்படி சரியாகி விட்டால் அங்கு இருந்து எடுத்து வந்த விளக்கை மீண்டும் அங்கு சென்று விட வேண்டும் என்பது நம்பிக்கை.இந்த திருவிழாவுக்கு தென்மாவட்டங்கள் அனைத்திலும் இருந்து இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

 

பாருங்க:  சின்னஞ்சிறு சிறுவனின் செயலை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ்
Previous articleகண்ணாடி திகில் பட ட்ரெய்லர்
Next articleவிஜய்யுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் நெகிழ்ச்சி