Latest News
புகழ்பெற்ற திருக்கடையூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவனான அமிர்த கடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனையும் வணங்கினால் ஆயுள் பலம் உண்டு என ஐதீகம்.
இதனால் 60வயது ஆனவர்கள் அதற்கு மேலும் நல்ல ஆயுளுடன் வாழ இங்கு வந்து 60ம் திருமணம் செய்து கொள்வார்கள்.
மார்க்கண்டேயர் வழிபட்ட 108 சிவ தலங்களில் 108வது தலம். 107வது தலம் கடவூர் மயானம் எனப்பெறும் திருமெய்ஞானம். ஆக ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரட்டைத் தலங்களினால் சிறப்புடையது. ஆதி காலத்தில் வில்வாரண்யம் எனவும் பின்னர் பிஞ்சிலாரண்யம்எனவும் வழங்கப்பெற்ற தலம்
சிவபெருமானுக்கு உகந்த வில்வமும்; அம்பிகைக்கு உகந்த பிஞ்சிலம் எனப்பெறும் ஜாதிமுல்லையும் இங்கு தல விருட்சங்கள்.
1997 – ம் ஆண்டு மார்ச் 26 -ல் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்று தற்போது வரும் 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தருமை ஆதீன 27 ஆவது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருமுன்னிலையிலும் பல்வேறு திருமடத்தின் தலைவர்களின் முன்னிலையிலும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.