மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில். இந்த கோவிலில் ஆயுள் பலத்துக்காக வேண்டி கொள்வார்கள். இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மனை வேண்டினால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இங்குதான் 60 வயதை நெருங்கிய தம்பதிகள் 60ம் திருமணம் செய்து கொள்வார்கள். 80வயதை நெருங்கியவர்கள் சதாபிஷேகம் விழாவும் செய்து கொள்வார்கள்.
தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு வரும் ஜூன் 3ல் பிறந்த நாள் வருகிறது.இத்துடன் அவருக்கு 80 வயதாகிறது. அதையொட்டி அபிராமி அம்மன் கோவிலில் இன்று அவருக்கு 80 வயதை நெருங்கியதற்கான பரிகார பூஜைகள் நடக்கிறது.
இதையொட்டி நேற்றே இசைஞானி இளையராஜா திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்து விட்டார். நேற்றும் பூஜைகள் நடந்த நிலையில் இன்றும் பரிகார பூஜைகள் நடக்கிறது.