டாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி

டாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி

சாலுமரத திம்மக்காவை தெரியாதவர்கள் கர்நாடகாவில் மிக குறைவு என்றே சொல்லலாம். திம்மக்கா சாதாரண பெண் கிடையாது.

திம்மக்கா கர்நாடக மாநிலத்தின்  தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தவர். பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள ஹுலிகல்லு எனும் ஊரை சேர்ந்த  சிக்கையா என்பவரை மணமுடித்து அந்த ஊருக்கு இடம் பெயர்ந்தார்..

இவர் இளம் வயதில் திருமணம் செய்தாலும் திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் திம்மக்கா பொட்டல் காடாக இருந்த தும்கூர் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரக் கன்றுகளை நடத்துவங்கியதாய்க் கூறப்படுகிறது.

இதற்கு அவரது கணவரும் உதவ துவங்கினார் மிக தள்ளாத வயதிலும் 400க்கும் மேற்பட்ட மரங்களை உருவாக்கிய இவர் பலரால் பாராட்டப்பெற்றார்.

ஏற்கனவே பல உயரிய விருதுகளை இவர் பெற்றிருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் சென் ட்ரல் யுனிவர்சிட்டி இவருக்கு உயரிய டாக்டர் பட்டத்தை விரைவில் வழங்க இருக்கிறதாம்.