ஊரடங்கால் வேலையை இழந்த இளைஞர்! யுடியுப் பார்த்து செய்த வேலை!

703

பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு என்ற இளைஞர் ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் யுடியூப் பார்த்து ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்றுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பேக்கரி ஒன்றில் பிரபு என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ளார். வேலை இல்லாத காரணத்தால் பணத்தேவைக்காக திருட முடிவெடுத்த அவர் ஏடிஎம்மை திருடுவது குறித்து யூட்யூபில் வீடியோ பார்த்து முயற்சி செய்துள்ளார்.

இதற்காக புதுச்சேரியின் மையப்பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏடிஎம்-இல் கடந்த 12ம் தேதி பணம் எடுக்க நபர் ஒருவர் வந்துள்ளார். யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்மை உடைக்க அவர் முயன்றபோது அலாரம் சத்தமிட்டதால் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூரை சேர்ந்த பிரபு என்று தெரியவந்து அவரைக் கைது செய்துள்ளனர்.

பாருங்க:  ஜோதிகா பேச்சால் கிளம்பிய சர்ச்சை! விஜய் சேதுபதியைக் கோர்த்துவிட்ட மர்ம நபர்!
Previous articleசன்னிலியோனின் எப்படி டான்ஸ் ஆடியிருக்காங்க பாருங்க! வீடியோ உள்ளே!!
Next articleஇருக்கானா இடப்புருக்கானா இல்லையியானா இல்லியானா! போட்டோகளை பார்த்து நீங்களே டவுட் கிளியர் பண்ணிங்கோ ரசிகர்களே!!