Corona (Covid-19)
ஸ்விக்கி, ஜோமடோ முலம் சென்னை மக்களுக்கான நல்ல செய்தி!!
கொரொனா 144 தடை உத்தரவால் இந்தியாவில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனைதொடர்ந்து, அரசு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டுக்கு ஒருவர் வெளியே வரலாம் என்று தெரிவித்திருந்தது.
என்னதான் அரசு தரப்பில் வீட்டுக்கு ஒருவர் வெளியே வரலாம் என்று கூறினாலும், மக்கள் பெரும்பாலும் அந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் சென்னையில், சென்னை மக்களுக்காக ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பை ஸ்விக்கி, ஜோமடோ swiggy, zomato உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க திட்டம் செயல்ப்பட உள்ளது. அதன்படி, சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் கூறுகையில், காய்கறி தொகுப்பை 90256 53376, 044 24791133 என்ற எண்களில் சென்னை மக்கள் ஆர்டர் செய்யலாம் என்று அறிவித்துள்ளார்.