Entertainment
எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேட்டு வாங்கி சாப்பிட- கமகமக்கும் தேங்காய் சட்னி ரெசிப்பி
மெதுவான இட்லியை சூடாக சாப்பிடுவது அலாதிதான். இட்லியின் சுவையை விட அதற்கு தொட்டுக்கொள்ளும் சட்னி சாம்பார்தான் மிக விசேஷமாகும்.
பல உயர்தர சைவ உணவகங்களில் பார்த்து இருப்பீர்கள் இட்லி ரொம்ப சூடாக எல்லாம் இருக்காது தேங்காய் சட்னியும் சொல்லிகொள்வது போல் இருக்காது.
உப்பு காரம் எதுவுமே அதில் இருக்காது வெறும் தேங்காயை மட்டும் வைத்து காரம் குறைவாக வைத்து அரைத்து இருப்பார்கள்.
இதுவே சாலையோர கடைகளில் பார்த்தால் சூடான இட்லி கமகம என்று கடுகு போட்டு தண்ணீராக தேங்காய் சட்னி என வியாபாரம் அனல் பறக்கும்.
தேங்காய் சட்னி செய்ய இருக்கும் ஆட்களுக்கேற்ப கொஞ்சம் , தேங்காய், பச்சை மிளகாய் போன்றவை அவசியமாகும். அத்துடன் சிறிது உப்பு, போன்றவைகளை மிக்ஸியில் போட்டு அரைத்தால் தேங்காய் சட்னி ரெடிதான் . இதில் ரொம்ப முக்கியமானது கொஞ்சம் சுள் என வேண்டும் என்றால் இரண்டு மிளகாய் சேர்க்கும் இடத்தில் இன்னொரு மிளகாய் வைத்துக்கொள்ளலாம் தேங்காய் சட்னிக்கு காரம் முக்கியம். பல ஹோட்டல்களில் தேங்காய் சட்னியில் காரமே இருக்காது.
தண்ணீராக சட்னி வேண்டுமானால் அரைக்கும்போதே தண்ணீர் உங்கள் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதற்காக ஓவர் ஆக தண்ணீர் சேர்க்க கூடாது.
தண்ணீர் சேர்க்கும்போது தண்ணீர் சேர்த்துள்ளதுக்கேற்றபடி காரம் உப்பு சரியாக இருக்கா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து லேசாக எண்ணேய் விட்டு கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் சிறிதளவு வெட்டியது, கருவேப்பிலை. காய்ந்த மிளகாய் போன்றவைகளை போட்டு சட்னியை தாளித்து கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயம், உளுந்து போன்றவைகளை சேர்த்து தாளிப்பது சட்னிக்கு தனியான மணத்தை கொடுக்கும்.
அதிகபட்சம் காய்ந்த மிளகாயில் சட்னி வைப்பதை விட பச்சை மிளகாயில் செய்தால்தான் சுவையாக இருக்கும். காய்ந்த மிளகாயை சட்னி தாளிப்பதற்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
இப்போது சூடான இட்லியை தேங்காய் சட்னியோடு சேர்த்து சாப்பிட்டு பார்த்தால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
