தெனாலிக்கு வயது 20

தெனாலிக்கு வயது 20

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு தெனாலி திரைப்படம் வந்தது. இந்த படத்தை கேஎஸ்.ரவிக்குமார் தயாரித்து இயக்கி இருந்தார். கமலின் சாதாரண நகைச்சுவை படம்தான் இது என்றாலும் இதில் கமல் செய்த முயற்சி இலங்கை தமிழராக நடித்திருந்தது.

இலங்கை தமிழராக நடித்தால் அதே மாடுலேசனில் சரியாக பேச வேண்டுமல்லவா அதை கமல் சரியாக பேசி இருந்தார். அச்சு அசல் பூர்வ இலங்கை குடி மகன் போலவே கமல் பேசியது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது

இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக வந்தது. இதில் எதைக்கண்டாலும் பயம் பயம் என்று  கமல் பேசிய வசனம் புகழ்பெற்றது.

இந்த படத்தில் கமல், ஜோதிகா, மதன்பாப், டெல்லிகணேஷ், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முக்கிய வேடத்தில் நடிகர் ஜெயராம் நடித்திருந்தார்.

இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

நாளையுடன் இப்படம் வெளிவந்து 20 வருடங்கள் ஆகிறதாம். கடந்த 2000ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.