பாஜக தேசிய இளைஞரணி தலைவராக தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 30 இருந்தாலும் இந்த பதவிக்கு வருவதற்கு அவர் தன் கடும் உழைப்பை பாரதிய ஜனதாவுக்கு செய்துள்ளார்.
தற்போது எம்.பியாக இருக்கும் இவர் சிறுவயதாக இருந்தபோதே கார்கில் நிவாரண நிதிக்கு பணம் சேர்த்து அதை அப்போதைய வாஜ்பாய் அரசிடம் வழங்கியவர்.
பாரதிய ஜனதாவில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வரும் இவர் அதில் ஆக்டிவான இளைஞனாக இருந்து வருகிறார். அதனால் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் பாராளுமன்ற உறுப்பினருக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
பாரதிய ஜனதாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு பாரதிய ஜனதாவின் தேசிய இளைஞர் அணித்தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.