திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட லாக் டவுனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாத லாக் டவுன் தளர்வுகளால் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிற நிலை இருந்து வருகிறது. அனைத்து தொழில்களும் சற்று லேசாக தலை தூக்கி வரும் நிலையில் மிகப்பெரும் தொழில் மற்றும் முதலீடுகளை அதிகம் போட்டுவிட்டு வருமானம் இன்றி வாழும் திரைப்பட தொழில் மிகவும் நசிந்து வருவதாக திரைப்படத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழில் விஜய் நடித்த மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் 5 வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என்றும் 50 சதவீத இருக்கைகளையே ஃபில் அப் செய்ய வேண்டும் . கடும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் இது குறித்து தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.