கொரோனா ஊரடங்கிற்கு பின் கடந்த 8 மாத காலத்திற்கு பின் தற்போதுதான் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு இன்றுதான் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் தற்போது வெளியிடப்படாது என இயக்குனர் பாரதிராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதனால் தீபாவளிக்கு பழமையான அந்தக்கால சூப்பர் ஹிட் ரஜினி, கமல், சிவாஜி, எம்.ஜி.ஆர் திரைப்படங்கள், விஜய் , அஜீத் நடித்த மாஸ் ஹிட் படங்களை மீண்டும் ஒளிபரப்பி வசூல் பார்க்க தியேட்டர்காரர்கள் ஆயத்தமாகி உள்ளனர்.
இதில் டிஜிட்டலில் வெளியான பழைய திரைப்படங்கள் பலவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம்.