Entertainment
ஆர் ஆர் ஆர் வெளியீடு- தியேட்டர்களில் திரைக்கு முன்னால் கம்பி வலை- கடும் பாதுகாப்பில் ஆந்திர திரையரங்குகள்
நம்ம ஊர்ல அஜீத், விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களை ரசிகர்கள் அதகளம் செய்து விடுவார்கள். சமீபத்தில் ரிலீஸ் ஆன வலிமை படமே இதற்கு சான்று. அது போலவே விஜய் ரசிகர்களும் தியேட்டரை ஒரு வழியாக்கி விடுவார்கள்.
இது போல ஆந்திராவில் ராம்சரண் தேஜா, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை சொல்லலாம் இவர்களுக்கு உள்ள வெறித்தனமான ரசிகர்கள் ஆடு எல்லாம் வெட்டி பலி கொடுப்பார்கள்.
தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகும் அன்று ஆடி பாடி தீர்த்து விடுவார்கள்.
ஒரு ஹீரோ என்றாலே சமாளிக்க முடியாது, இதில் வரும் 25ல் வெளியாக உள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் ராம்சரண் என இரு முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் எல்லை மீறி நடப்பார்கள் என ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் ஸ்க்ரீனுக்கு முன்பு மிகப்பெரிய கம்பி வலை போடப்பட்டுள்ளது.
