சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்துள்ள படம் தி லெஜண்ட்.இந்த படத்தில் சரவணன் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடித்துள்ளனர்.
இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, யோகிபாபு, ரோபோ சங்கர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜேடி ஜெரி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருவதற்கு முன்பு இப்படத்தில் அண்ணாச்சி எப்படி ஆக்சன் ஹீரோவா நடிப்பாரோ என பலரும் எண்ணி வந்த நிலையில், டிரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்து அசந்து போய் நிற்கின்றனர்.
இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.இதில் பேசிய சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், ரஜினி சார் , விஜய் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.
மேலும் இப்படம் பேன் இந்தியா படமாக வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.