தி ப்ரீஸ்ட் பட வெளியீடு தள்ளிவைப்பு

35

மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ப்ரீஸ்ட். இது வித்தியாசமான கதைக்களம் கொண்ட மலையாளப்படம். மலையாளத்திரையுலகில் நீண்ட நாட்களாக நடித்து வரும் மஞ்சுவாரியர் மம்முட்டி இணைந்து ஒரு படத்தில் கூட நடித்தது இல்லையாம். இப்படத்தில் தான் முதன் முதலில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. பின்பு, கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்பைத் தொடங்கி முழுமையாக முடித்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றும் வருகிறது அதே வேளையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்து இப்படம் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை  துபாய், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. படக்குழுவினரோ ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டு இருந்தது.

சில வெளிநாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பது மட்டுமன்றி, கேரளாவிலும் இரவு நேரக் காட்சிக்கு இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லை.

வார இறுதி நாட்களில் குடும்பத்தினர் இரவு நேரக் காட்சிகளுக்குத் தான் வருவார்கள் என்பதால், இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை என தெரிகிறது.

பாருங்க:  எம்.ஜி.ஆரை போல் அஜீத்தை வடிவமைத்த ரசிகர்கள்
Previous articleத்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்
Next articleஇந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலை தவறானது- பேரன் ராகுல்