cinema news
தி பேமிலி மேன் தொடர்- அமேசானுக்கு பாரதிராஜாவின் கண்டனம்
தி பேமிலி மேன் என்ற இணைய தள வெப்சீரிஸ் தயாராகியுள்ளது. இதில் தமிழர்களை மிகவும் இழிவாக காண்பித்திருப்பதாக ஆரம்பத்தில் பிரச்சினை எழுந்த நிலையில் இந்த தொடர் வெளிவரக்கூடாது என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் பல எதிர்ப்புகளை மீறி அமேசான் ப்ரைம் ஓடிடியில் இந்த தொடர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் தி பேமிலி மேன் தொடரை நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்ததுடன் அமேசான் ப்ரைம் தலைமை நிர்வாகி அபர்ணா புரோகித்துக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.