இலங்கையில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாகவே கடுமையான பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன.கடுமையான பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றன.
3 ரூபாய் அளவு முட்டை நம் இந்திய மதிப்பில் 30 ரூபாய்க்கு விற்கப்படுவதும், பான் என்று சொல்லக்கூடிய ப்ரட்டின் விலை 200 ரூபாயை நெருங்கி கொண்டிருப்பதும், பெட்ரோல், டீசல், கியாஸ் என எதுவுமே கிடைக்காத நிலையில் மக்கள் அதிகம் துன்புற்று வருகின்றனர்.
ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களால் பிரதமர் மட்டுமே பதவி விலகியுள்ளார். குடியரசுத்தலைவரை பதவியை விட்டு விலக சொல்லியும் அவர் இன்னும் விலகவில்லை.
இந்த நிலையில் ரணில் விக்ரம்சிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்று சில நாட்கள் ஆகிறது.நமது அண்டை நாடான இந்தியாதான் இலங்கைக்கு அதிகம் உதவி வருகிறது.
குறிப்பாக பல ஆயிரம் டன் எரிபொருட்களை கப்பலில் அனுப்பி வைத்தது. இந்த சூழ்நிலையில் இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவியை எங்களுடைய நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை எதிர்நோக்கி உள்ளேன். குவாட் மாநாட்டில் இலங்கைக்கு உதவுவது தொடர்பான முன்மொழிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ரணில் தெரிவித்துள்ளார்.