நன்றி தெரிவித்த தனுஷ்

நன்றி தெரிவித்த தனுஷ்

அசுரன் திரைப்படம் கடந்த வருடம் இதே நாளான அக்டோபர் 4ம் தேதி வெளியானது. தனுசுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷ் மிக சிறப்பாக நடித்திருந்தார். ஜாதி ரீதியான பிரச்சினைகள் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

ஜி.வி பிரகாஷ் வெற்றி மாறன் வழக்கமான கூட்டணிதான் என்றாலும் பின்னணி இசை பாடல்கள் நன்றாகவே இருந்தது.

நடிப்பு ராட்சஷன் போல தனுஷ் இப்படத்தில் மிகப்பெரிய முதிய கனமான பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்து பெயர் வாங்கினார்.

இன்றோடு 1 வருடம் இப்படம் முடிவடைவதை ஒட்டி தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.