மதுபோதையில் மருத்துவரை தாக்க முற்பட்ட தஞ்சை வாலிபர்

28

தஞ்சையை சேர்ந்த ராகவன் மற்றும் இவரது கூட்டாளியான ஓரத்தநாடு மாதேஸ்வரனுடன் சேர்ந்து ஓரத்தநாட்டில் இருந்து பைக்கில் தஞ்சை வந்துள்ளனர். தஞ்சை தொல்காப்பியர் பூங்கா அருகே நிலைதடுமாறி விழுந்த இவர்களை இவரது நண்பர்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் மது போதையில் இருந்த ராகவன் மற்றும் மாதேஸ்வரன் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர் அருண்பாண்டியன் கண்டித்தார் அவரையும் தகாத முறையில் பேசிய அந்த நபர்கள் அவர்களை தாக்க முயற்சித்து தப்பி ஓடி விட்டனர்.

இதனால் கோபமான மருத்துவர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டி.எஸ்.பி  கலெக்டர் என அனைவரும்  அனைவரும் வந்து அவர்களை விசாரித்தனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், அருண்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராகவன், மாதேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன், எம்.ராகவன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பாருங்க:  பெரா வழக்கை விசாரிக்க தடை - தினகரன் மகிழ்ச்சி!
Previous articleநிதி அகர்வால் பாராட்டிய படக்குழு
Next articleஏ.ஆர் ரஹ்மானின் பணிவு குறித்து விவேக்