தஞ்சாவூர் அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இந்த கிராமம் தஞ்சையில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பர் மடத்துக்கென கோயில் உள்ளது.
வருடா வருடம் சித்திரை மாதத்தில் அப்பர் பிறந்த தினத்தில் அவரது குருபூஜையாக கருதப்பட்டு திருவிழா நடைபெறும். இந்த வருடத்துக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வே தேரோட்டம்தான் இந்த தேரோட்டம் நேற்று இரவு 12 மணியளவில் இவ்வூரில் நடைபெற்றது. தேர் ஊரை சுற்றி வரும்போது மின் கம்பியில் உரசியதில் தேரில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் எரிந்து சாம்பலானார்.
தேர்த்திருவிழாவை பார்த்த மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். தேரை வளைவில் இழுக்கும்போது தேர் உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டதே விபத்துக்கு காரணம் என தெரிய வருகிறது.
இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் அடக்கம். 94 வருடமாக சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா இப்படி எதிர்பாராத விதமாக மோசமான விபத்தாக மாறி விட்டதே என அப்பகுதி மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.