தஞ்சாவூரில் புகழ்பெற்றது சூர்ய கலா, சந்திரகலா ஸ்வீட். இந்த ஸ்வீட் பல ஊர்களில் கடைகளில் விற்பனைக்கு இருந்தாலும், தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட் தான் இந்த ஸ்வீட்க்கு புகழ்பெற்றது.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரை சேர்ந்த ஒருவர் இங்கு வந்து இந்த பாம்பே ஸ்வீட்டை ஆரம்பித்துள்ளார்.
1949ம் ஆண்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே சிறு கடையாக தொடங்கப்பட்ட இந்த கடையில் சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
இந்த கடையை 1949ல் கடையை ஆரம்பித்தவரின் மகனான சுப்பிரமணிய சர்மா நிர்வகித்து வருகிறார்.
அருகில் உள்ள 14 நகரங்களில் பாம்பே ஸ்வீட்டின் கிளை உள்ளது. இங்குள்ள ஒரே சமையல் கூடத்தில் இருந்தே சந்திரகலா, சூர்யகலா ஸ்வீட்கள் செய்யப்பட்டு அங்கு எடுத்து செல்லப்படுகின்றன.
சந்திரகலா சந்திரன் போல பிறை வடிவிலும், சூரிய கலா முழு வடிவத்திலும் காணப்படுகிறது. உள்ளே இனிப்பு பாதாம் எல்லாம் வைத்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் ஒரு ஸ்வீட்தான் இந்த சூர்யகலா, சந்திரகலா ஸ்வீட்கள் ஆகும்.
தஞ்சைக்கு சென்றால் நேராக பாம்பே ஸ்வீட்ஸ்க்கு சென்று இந்த சூர்யகலா, சந்திரகலாவை சுவைக்க மறவாதீர்கள்.