தஞ்சை பஸ்ஸில் மின்சாரம் பலியான விபத்து- நிவாரணம் அறிவித்த முதல்வர்

58

தஞ்சை மாவட்டம் கல்லணை என்ற இடத்தில் இருந்து வரகூர் என்ற ஊர் அருகே சென்ற கணநாதன் என்ற தனியார் பேருந்து நேற்று விபத்துக்குள்ளாக்கியது. சாலை விரிவாக்க பணிக்காக தோண்டியதில் நிலை தடுமாறிய பஸ் மாட்டிக்கொள்ள மேலிருந்த மின் கம்பி பேருந்து மீது விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலர் மின்சார அதிர்ச்சிக்குள்ளாகினர் மின்சாரம் பாய்ந்து பலர் அதிர்ச்சியடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 3லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

காயமடைந்தவர்களுக்கு 25000 நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  தீபாவளி படமாக நாளை முதல் சந்தானத்தின் பிஸ்கோத்