விரலில் புண் ஏற்படும் அளவுக்கு உணர்ச்சிபூர்வ திரைக்கதை எழுதிய தங்கர்பச்சான்

விரலில் புண் ஏற்படும் அளவுக்கு உணர்ச்சிபூர்வ திரைக்கதை எழுதிய தங்கர்பச்சான்

தமிழில் அழகி படம் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் தங்கர்பச்சான். கடலூர் மாவட்ட மண்மணத்தை அப்படியே நமக்கு தந்திருந்தார் தங்கர்பச்சான். இவர் அதற்கு முன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

இதன் பிறகு தென்றல், சொல்ல மறந்த கதை, அம்மாவின் கை பேசி உள்ளிட்ட பல படங்களை உணர்ச்சிபூர்வமாக இயக்கினார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு அழகிய கதையை 13 நாட்கள் தொடர்ந்து இவர் எழுதினாராம். கொரோனாவால் வீட்டுக்குள் 6 மாதம் முடங்கி இருந்த நிலையில் 13 நாட்கள் ரிஸ்க் எடுத்து இந்த உணர்ச்சிபூர்வமான தனது அடுத்த படத்தின் கதையை எழுதினாராம்.

தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் கை விரலில் புண்களே வந்து விட்டனவாம். எப்படியோ அழகி ரேஞ்சுக்கு அடுத்த ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்