Connect with us

தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி…

Tamil Flash News

தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி…

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சியில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி -ஓபிஎஸ் தரப்புடன் மோதல் ஏற்பட்டு டிடிவி தினகரன் தனித்து செயல்பட்ட போது அவருக்கு வலது கரமாக நின்றவர் தங்க தமிழ்ச்செல்வன். அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தவர். ஆனால், தினகரன் தன்னை நடத்து விதத்தில் அதிருப்தி அடைந்த அவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் திமுகவில் இணைந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜனுக்கு திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

More in Tamil Flash News

To Top