தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்க தமிழ்செல்வன். அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். முதல்வராக இருந்த ஜெ போட்டியிட ஆண்டிபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர் இவர்.
பின்பு ஜெவின் மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்து செயல்பட்டார் அதன் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தங்க தமிழ்செல்வன் இயல்பான மதுரை வழக்கு மொழி வட்டார பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடக்கூடிய தன்மை உள்ளவர்.
இப்போது திமுகவில் இணைந்து பணியாற்றி வரும் அவர் நேற்று ஒரு நிகழ்ச்சியின்போது, வரும் தேர்தலில் திமுக படுதோல்வியடையும் என கூறியுள்ளார். உடனே சுதாரித்த நிருபர்கள் திமுகவா என கேட்டவுடன் சாரிப்பா அப்டியே போட்றாதிங்க அண்ணா திமுக என திருத்தி பேசியுள்ளார்.
இதை இணையதளங்களில் சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பவர்கள், ஒரு கட்சியில் இருந்தா எல்லா நியாபகம் இருக்கும் இவர் எல்லா கட்சியிலும் இருக்கார்ல அதான் என கிண்டலடித்து வருகின்றனர்.