Connect with us

ஆப்கனில் பெண்ணை வேலையை விட்டு நீக்கிய தாலிபான்கள்

Latest News

ஆப்கனில் பெண்ணை வேலையை விட்டு நீக்கிய தாலிபான்கள்

20 வருடங்களுக்கு முன் ஆப்கனில் காட்டு தர்பார் ஆட்சி நடத்தியவர்கள் தாலிபான்கள். அமெரிக்க படைகள் வெளியேறியதால் மீண்டும் ஆப்கனுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது ஆட்சியை கைப்பற்றி முல்லா உமரின் மகனை அதிபராக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் பழமை வாதம் என்ற கற்காலத்துக்குள் தாலிபான் நுழைந்துள்ளனர். அங்கு நாகரீகமான பல விசயத்துக்கு அவர்கள் தடை விதித்து வருகின்றனர்.

முக்கியமாக பெண்கள் வேலை செய்யகூடாது கல்வி கற்க தடை என பழைய கோட்பாட்டுக்குள் நுழைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஷப்னம் தவ்ரான் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். பெண் என்பதால் வேலையை விட்டு செல்லுமாறு கூறி இருக்கிறார்களாம்.

ஆரம்பத்தில் பெண்கள் கல்வி கற்க வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என சந்தோஷப்பட்டேன் இப்போது நிலைமையை உணர்கிறேன் என வருத்தமடைந்துள்ளார் இந்த பெண்.

பாருங்க:  ஆப்கானில் முறைப்படி புதிய அரசு இன்று அமைகிறது

More in Latest News

To Top