ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ளது தாளவாடி மலை. இது அடர்ந்த காட்டுப்பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதியில் மலைக்கிராமங்கள் அதிகம் இருந்து வருகின்றன.
இந்த பகுதியில் மரியபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
நேற்று காலை வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று மரியபுரம் கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வளர்த்து வரும் ஆட்டுப்பட்டியில் புகுந்து ஒரு ஆட்டை அடித்து கொன்றுவிட்டு மற்றொரு ஆட்டை இழுத்து சென்றது. காலை நேரத்தில் பட்டியில் சிறுத்தை புகுந்து செம்மறி ஆட்டை அடித்துக் கொன்றதை பார்த்த அந்தோணிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.