விஜய்யின் 66வது படத்தை வம்சி பைதிபள்ளி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கிறார்கள்.
இந்த படம் குடும்ப படமாக உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என பேச்சு எழுந்த நிலையில் அவ்வாறு நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் நடிகர் சரத்குமாரும் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிகிறது.இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.