தளபதி விஜய் ரசிகர்களுக்கான கேம் ஷோ- இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு

தளபதி விஜய் ரசிகர்களுக்கான கேம் ஷோ- இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துக்காக ரசிகர்கள் 6 மாதத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அவர்களின் பொறுமையை இந்த கொரோனா அதிக அளவில் சோதித்து வருகிறது என கூறலாம்.

 

இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்பதே உச்சக்கட்ட குழப்பமாக உள்ளது. இருப்பினும் படக்குழு தியேட்டரில்தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என்பதில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களின் மனச்சோர்வை போக்க விஜய் ரசிகர்களுக்கான கேம் ஷோ ஒன்றை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்துகிறது.

இதை நடிகர் சிபிராஜும் விஜய்யின் மிக தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனுவும் இன்று மாலை இதற்கான அறிவிப்பை சொல்கின்றனர்.

அது வரை காத்திருங்கள்.