விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65வது படமாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற தவறி விட்டது.
இருப்பினும் அதை எல்லாம் மறந்து விட்டு நடிகர் விஜய் அடுத்த படமான இயக்குனர் வம்சி பைத்தி பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் ஒரு ஆக்சன் படம் என்றும், இது வசீகரா டைப்பில் ஒரு ஜாலியான விஜய் படம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. விஜய்யும் ஆக்சனை தவிர்த்து சாதாரண ஜாலியான படங்களில் நடித்து நாட்களாகி விட்டது.
இந்த நிலையில் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பிரபு நடிக்கிறார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் நடித்தார். அதற்கு பிறகு தற்போது நடிக்கிறார்.
இதே போல் நடிகை ஜெயசுதாவும் இப்படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக விளங்கிய இவர் ரஜினிகாந்த் நடிப்பில் 30 வருடத்துக்கு முன்பு வந்த பாண்டியன் திரைப்படத்தில் நடித்தவர் ஆவார்.