தளபதி 65ல் விஜய்க்கு ஜோடி புதிய அப்டேட்

தளபதி 65ல் விஜய்க்கு ஜோடி புதிய அப்டேட்

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை தற்போது நெல்சன் இயக்கியுள்ளார். புதியதாக வித்தியாசமான கதையுடன் விஜய்யை இயக்குகிறார்.

தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் ஆக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே முகமூடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தமிழில் பெரிய அளவில் இல்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாவார்.