Published
3 years agoon
By
Vinoஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் தலைவி திரைப்படக் குழுவினர் கொரோனாவால் 5 கோடி ரூபாய் அளவுக்கு நஷடமடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் சினிமாவில் திரைப்படமாகவும் வெப் சீரிஸாகவும் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு திரைப்படமாக ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் இயக்கும் தலைவி படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் திடீரென கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹைதராபத்திலும் தமிழகத்தில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இரண்டு பிரம்மாண்டமான செட்கள் இந்த படத்துக்காக போடப்பட்டு இப்போது வாடகை எல்லாம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லாக்டவுன் இன்னும் அதிகமாகும் பட்சத்தில் மழையால் செட்கள் பாதிக்கப்பட்டு 5 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரலாம் என சொல்லப்படுகிறது.
கொரோனா விதிமுறைகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி விட கோர்ட் உத்தரவு
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்