cinema news
தலைவி படத்தை எதிர்த்த வழக்கு- ஒத்தி வைத்த நீதிமன்றம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி குயின் மற்றும் தலைவி படங்கள் இயக்கப்படுகின்றன. தலைவி படத்தை ஏ.எல் விஜய் இயக்க கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
குயின் படத்தை பிரியதர்ஷன் இயக்க நித்யா மேனன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தை வெளியிடக்கூடாது என ஜெவின் உறவினரும் சகோதரர் மகளுமான ஜெ.தீபா வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தன் தந்தையை இழிவாக காண்பித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 10, 11ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என ஒத்தி வைத்துள்ளது.