அஜித் கொடுத்த சூப்பர் ஐடியா ; அசந்து போன வினோத் : தல 60 அப்டேட்

192

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இதே டீம் அடுத்த படத்திலும் இணையவுள்ளது. அஜித்திற்கு இப்படம் 60வது படமாகும். இப்படத்தில் அவர் ஒரு அதிரடி காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதை முழுவதையும் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். கதை மிகவும் நன்றாக இருப்பதாக கூறிய அஜித், என்னுடைய விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களிலும் குடும்ப செண்டிமெண்ட் இருந்தது. இந்த கதையில் அது குறைவாக இருக்கிறது. அதை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் என பரிந்துரைத்துள்ளார்.

எனவே, அதற்கான பணிகளில் தற்போது வினோத் ஈடுபட்டுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

பாருங்க:  பாரதிராஜாவை பார்த்து 30 வருசம் ஆச்சு- முன்னாள் சினிமா இயக்குனர்