Latest News
ரிஸ்க் எடுத்து பூனைகளை காப்பாற்றிய கடற்படை வீரர்கள்
மனிதநேயம் இன்னும் அழிந்துபோகவில்லை என்பதை ஒரு சில விசயங்கள் நிரூபிக்கின்றன. இன்னும் ஈரமுள்ள மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ்கிறார்கள் என்பதற்கு தாய்லாந்தில் நடந்துள்ள சம்பவம் உதாரணமாக உள்ளது.
தாய்லாந்தில் மீனவர்கள் சென்ற படகு ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில் படகில் சென்ற மீனவர்கள் அனைவரும் கடலில் குதித்து தப்பினர்.
ஆனால் அதில் அப்பாவி பூனைகள் 4 மாட்டிக்கொண்டன. விஷயமறிந்த கடற்படை வீரர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து அந்த பூனைகளை காப்பாற்றினர்.
இது நெகிழ்ச்சியூட்டும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.