நாளை தை அமாவாசை மறவாதீர் முன்னோர்களுக்குரிய முக்கிய நாள்

19

உத்தராயண புண்ணிய காலம் என சொல்லப்படும் தை மாதத்தில் வரும் அமாவாசையான தை அமாவாசை முன்னோர்களின் கடன் தீர்க்க உகந்த அமாவாசை ஆகும்.

நமக்கு பிடித்த நம்முடன் வாழ்ந்த தாய், தந்தையர், தாத்தா, பாட்டி, சகோதர, சகோதரிகள் இறந்துவிட்டால் அவர்களுக்குரிய நீத்தார் கடன் என சொல்லக்கூடிய முன்னோர் வழிபாடு செய்யக்கூடிய நாள் நாளை ஆகும்.

இந்த நாளில் புண்ணியத்தலங்கள் , புண்ணிய தீர்த்தங்கள் எங்காவது சென்று இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்டவைகளை உரிய வேத விற்பன்னர்களை வைத்து செய்தால் நலம் பயக்கும்.

முன்னோர்களின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் புண்ணிய தீர்த்தங்கள் இல்லாதவர்கள் நன்றாக குளித்து வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று உங்கள் வீட்டில் இறந்துவிட்டவர்களுக்காக மனமுருக வேண்டிக்கொள்ளலாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

அமாவாசை அன்று காகத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு ஆதரவற்றோருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு தானம் செய்யலாம். உணவகத்தில் ஒரு சின்ன பார்சல் வாங்கி உண்மையில் பசியால் வாடும் ஒரு தெரு நாய்க்கு கொடுத்தால் கூட உங்களின் முன்னேற்றமும் உங்கள் வீட்டில் இறந்து போன முன்னோர்களின் பலமும் மேம்படும். அவர்கள் உங்கள் குடும்பத்துக்கு பரிபூரண ஆசியை தருவார்கள்.

நாளை மறவாதீர்கள்.

பாருங்க:  டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !