நடிகை தபுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழிலும் சிறைச்சாலை, சினேகிதியே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஹிந்தி படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏ சூட்டபிள் பாய் என்ற வெப்சீரிஸில் தற்போது இவர் நடித்து வருகிறார். இப்படத்தில் 42வயதான தபு 25 வயது பையனான இஷான் கட்டாருடன் ரொமான்ஸ் செய்வது போல காட்சிகள் உள்ளன.
இந்த சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இப்படத்தில் தபு நடித்த முத்தக்காட்சிகள் சில கோவில் வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளதாவது. கோவிலில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட காட்சிகள் குறிப்பிட்ட மதத்தவரை இழிவுபடுத்துவது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக நிர்வாகி கவுதம் திவாரியும் இதை கண்டித்துள்ளார். இதன் உண்மை தன்மையை அறிய வேண்டும் என ரேவா காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார்.