Entertainment
மீண்டும் தமிழுக்கு வரும் தபு
அஜீத் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அந்த படம் சற்று தள்ளி போயுள்ளது. அந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் வலிமை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் அடுத்த படமும் அஜீத்தை வைத்தே இயக்குகிறார்.
இப்படத்தில் நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜீத்தும், தபுவும் பல வருடங்களுக்கு முன் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படத்துக்கு பிறகு தபு மீண்டும் அஜீத்துடன் இப்படத்தில் பல வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க இருக்கிறார்.
