Latest News
தா பாண்டியன் கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவர்களோடு நெருங்கி பழகியவர். அவர்களுடன் கூட்டணி வைத்து சில பல தொகுதிகளுக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.
தா. பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாகி தற்போது சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருக்கு சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
