தமிழ் திரைப்பட நடிகர்களில் ஹீரோவாக நடித்து படம் இயக்கி சக்சஸ் செய்தவர் ராஜ்கிரண். இவரின் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் சிந்தனையை தூண்டும் அவரின் சமீபத்திய பதிவு இது.
எந்த இந்துவும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால்,
அவன் உண்மையான இந்து இல்லை.
எந்த இஸ்லாமியனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால், அவன்
உண்மையான இஸ்லாமியன் இல்லை.
எந்த கிருஸ்துவனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால், அவன்
உண்மையான கிருஸ்துவன் இல்லை.
எந்த பவுத்தனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால்,
அவன் உண்மையான பவுத்தன் இல்லை.
எந்த சீக்கியனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால்,
அவன் உண்மையான சீக்கியன் இல்லை.
எந்த ஜைனனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால்,
அவன் உண்மையான ஜைனன் இல்லை.
எந்த நாத்திகனும்
பயங்கரவாதியாக இருப்பதில்லை.
அப்படி இருந்தால், அவன்
உண்மையான நாத்திகன் இல்லை.
உண்மை இப்படி இருக்கையில்,
பயங்கரவாதச்செயல்கள் செய்ததற்கு
வலுவான ஆதாரங்கள் இருக்கின்றனவே
அது எப்படி…?
அதன் காரண காரியங்கள் என்ன…?
அவரவர் மதத்தைப்பற்றிய
புரிதல் இல்லாமை, கல்லாமை,
அவரவர் பிறப்பும்,
தாய் தந்தையரின் வளர்ப்பும் சரியில்லாமை,
அரசியல்வாதிகள்
தங்களின் சுயலாபத்துக்காகச்செய்யும்
பிரித்தாளுமை… என ராஜ்கிரண் கூறியுள்ளார்.