Tamil Flash News
ஆபாச புகைப்பட மிரட்டல்; காதலனை கடத்திய டென்னிஸ் வீராங்கனை – சென்னையில் அதிர்ச்சி!
தனது காதலனை அவரின் காதலி கூலி ஆட்கள் மூலம் கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வாசவி. இவர் ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். தமிழகத்தின் சார்பாக பல போட்டிகளில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைகளால் பல கோப்பைகளை அவர் வாங்கியுள்ளார்.
இவர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நவீத் அஹமதுவை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையில் அவ்வப்போது சண்டை வந்தாலும், சமாதானம் ஆகி காதலை தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் நவீத்தை கடத்தினர். அவரிடமிருந்து ஐபோன் மற்றும் கை கைடிகாரத்தை பறித்து விட்டு அவரை விட்டுவிட்டனர். அதைத்தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் நவீத்தின் காதலி வாசவியே அவரை ஆள் வைத்து கடத்தியது தெரியவந்தது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வைத்து நவீத் மிரட்டியதால் அவரது செல்போனில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை அழிப்பதற்காகவே, அவரை கடத்தியதாக வாசவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, அவருக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரியின் மகனான பாஸ்கரனையும் கைது செய்தனர்.