Latest News
அர்ச்சகர்கள் நீக்கம்- ஹெச்.ராஜா கடும் கண்டனம்
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் புதிய அர்ச்சகர்கள் பலரை நியமித்தது. இதில் பெரிய அறநிலையத்துறை சம்பந்தமான கோவில்களில் நீண்ட நாள் வேலை பார்த்து வந்த அர்ச்சகர்களும் நீக்கப்பட்டதாக புகார் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இது கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உச்சமன்ற தீர்பிற்கு விரோதமாகவும் செயல்படும் தமிழக அரசு ஏற்கனவே பணியிலுள்ள ஏழை அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக வன்முறையாக தூக்கி எறியும் இந்த சட்டவிரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்ட நடவடிக்கை மூலம் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என கூறியுள்ளார்.